எனது எண்ணங்கள் ...

Photobucketநீ நினைப்பதெல்லாம்
நடக்கிறதென்றால் ...
புரிந்துகொள் ..
நீ தவறான வழியில் செல்கிறாய் ...

* * * * *

மனதில் பதிந்தவை
அனைத்தும் நினைவில் இருக்கும் ...
ஆனால் பலருக்கு
மனதில் எதுவுமே பதிவதில்லை ...

* * * * *

புன்னகையை கைவிடாதே ...
சொல்ல முடியாத சூழ்நிலைகளில்
ஒரு புன்னைகை

எளிதாக பேசிவிடும் ...

* * * * *

ஆசைகள் எளிதாக கிடைக்கும்
சேர்க்காதே ...
அதிகம் சேர்ந்துவிட்டால்
செலவழிப்பது கடினம் ...
உன்னையே அழித்துவிடும் ...

* * * * *

சூடான கண்ணாடியும்
குளிர்ந்த கண்ணாடியும்
பார்வைக்கு ஒன்றே
தொட்டால் மட்டுமே உணரமுடியும் ...

* * * * *

வெற்றியின் பாதை
உனது தேடல்களில் மட்டுமே ...
தேடல்களை தேங்க விடாதே
முற்றுபுள்ளியாய்...
தங்கிவிடுவாய் ஓரிடத்தில் ...

* * * * *எனது எழுத்தோவியங்களை
மேலே உள்ள பக்கங்களில் பார்க்கலாம்...
மறக்காமல் உங்கள் கருத்துக்களை
தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன் ..
என்னையும் என் எழுத்துக்களையும்
செதுக்கிட அது
உதவியாக இருக்கும் ...


என்றும்
இனிய தோழன்
விஷ்ணு...